Categories
மாநில செய்திகள்

பயணிகள் ரயில் சேவைக்கு அனுமதி… எப்போ தெரியுமா….?

திங்கட்கிழமை முதல் சிறப்பு ரயில் போக்குவரத்து இயக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநிலத்திற்கு இடையே ஆன பயணிகள் ரயில் சேவை வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, ஐந்தரை மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. ஏற்கனவே குறிப்பிட்ட ரயில் தடங்களில்  இயக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

எந்தெந்த வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படுவது என்பது குறித்து அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருச்சி – செங்கல்பட்டு சூப்பர் பாஸ்ட் ரயில், மதுரை- விழுப்புரம், கோவை – காட்பாடி, திருச்சி – செங்கல்பட்டு, அரக்கோணம் – கோவை, கோவை – மயிலாடுதுறை, திருச்சி – நாகர்கோவில் ஆகிய 7 வழித்தடங்களில், வரும் திங்கட்கிழமை முதல் ரயில் சேவை மீண்டும் ஆரம்பமாக உள்ளது. ஆனால் இந்த ரயில் போக்குவரத்திற்கான டிக்கெட் முன்பதிவு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. மேலும்  விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில் போக்குவரத்து தொடங்குவது குறித்து தெற்கு ரயில்வே இன்று அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |