Categories
தேசிய செய்திகள்

பேரழிவுகளால் தத்தளிக்கும் இந்தியா – ராகுல் காந்தி..

பிரதமர் திரு மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் இந்தியா தத்தளித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. திரு ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து திரு ராகுல் காந்தி தமது டுவிட்டர் பதிவில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி -23.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும், 12 கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு தனது GST நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு செலுத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். உலகிலேயே மிக அதிகமாக நாள்தோறும் புதிதாக கொரோனா நோயாளிகள் உருவாகி வருகிறார்கள் எனவும், எல்லையில் வெளிநாட்டு படைகளின் அத்துமீறல் இருந்து வருவதாகவும் திரு ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |