Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழியாக ஐந்து மொழிகளுக்கு ஒப்புதல்…!!

ஜம்மு – காஷ்மிரின் அலுவல் மொழியாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஜம்மு காஷ்மீரின் அலுவல் மொழியாக உருது, டோகிரி, காஷ்மீரி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது என்று தெரிவித்த அவர் மத்திய அரசு பணியாளர்களின் திறனை மேம்படுத்த மிஷன் கர்மயோகி திட்டத்தை செயல்படுத்தவும் மத்திய அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |