தமிழகத்தில் 5 மாதங்களாக ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் எப்பொழுதும் ஜிஎஸ்டி வரி என்பது அதிகரித்த வண்ணமே இருந்து வரும். ஆனால் தற்பொழுது ஐந்துமாத ஊரடங்கு காரணத்தால் ஜிஎஸ்டி வரி என்பது சற்று குறைந்துள்ளது. அதாவது இந்த ஆகஸ்டு மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.5,243 கோடி வருவாயை பெற்றுள்ளது. சென்ற 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜி.எஸ்.டி ரூ.5,973 கோடியாக இருந்தது. இந்த கணக்கீட்டின் படி பார்த்தால் இந்த 2020 ஆம் ஆண்டு சற்று ஜிஎஸ்டி வரி குறைந்து உள்ளது தெரிகிறது.
ஆனால் இந்த ஊரடங்கு காரணத்தால் நிறுவனங்கள் முக்கால் பங்கு இயங்காத காரணத்தால் மட்டுமே ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது என்றும் நிறுவனங்கள் இயங்க தொடங்கிய நாட்களிலிருந்து ஜிஎஸ்டி வரி என்பது அதிக வருவாயை ஈட்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்ற ஆண்டு வருவாயை இந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12% ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.