Categories
உலக செய்திகள்

ஐ.நா பொதுச்சபை கூட்டம்… பிரதமர் மோடி உரை…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டம் வருகின்ற 22ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரையில் காணொளி காட்சி மூலமாக நடக்க உள்ளது. ஐநா சபையின் 75 ஆண்டுகால வரலாற்றில் காணொலி காட்சி மூலம் நடக்கும் ஐநா சபை கூட்டம் இதுவே முதல் முறையாகும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் தங்கள் நாடுகளில் இருந்தபடியே காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்கின்றனர். 15 நிமிட வீடியோ உரை அந்த சபையில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றும் தலைவர்களின் தற்காலிகமான பட்டியலை ஐநா சபை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலின் படி, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ முதலாவது உரையாற்றுகிறார். இரண்டாவதாக அமெரிக்க ஜனாதிபதி உரையாற்ற உள்ளார். இந்த பட்டியலின்படி பிரதமர் நரேந்திர மோடி வருகிற 26-ஆம் தேதி உரையாற்றுகிறார். உரையாற்றும் தலைவர்களின் பட்டியலில் துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன், சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல மேக்ரான் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தப் பட்டியல் தற்காலிக பட்டியல் என்பதால் இன்னும் சில நாட்களில் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதன் பிறகுதான் எந்தெந்த தலைவர்களும் உரையாற்றுவார்கள் என்பது உறுதிப்படுத்தப் படும். வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி பல்லுயிர் பெருக்க உச்சி மாநாடு மற்றும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 4ஆம் தேதி வரையில் உலக மகளிர் மாநாடு, அக்டோபர் இரண்டாம் தேதி அணுஆயுத ஒழிப்பு ஆதரவு நாள் மாநாடு ஆகியவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளன.

Categories

Tech |