Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் மீது எதிர்ப்பு மனு… ஏன் தெரியுமா…?

செமஸ்டர் கட்டணத்தை குறைவாக வாங்க வேண்டுமென மாணவர் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர்கள் எழுதவேண்டிய செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணங்களை கல்லூரிகளில் வரும் ஐந்தாம் தேதிக்குள் செலுத்துமாறும் தவறினால் அபராதத்துடன் செலுத்த வேண்டும் எனவும் இல்லையென்றால் மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று  அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் அனுப்பியிருந்தது. மாணவர்கள் பயன்படுத்தாத ஆய்வுக் கூடகங்களில், அதாவது நூலகம், கணினி கூடம் போன்றவற்றிற்கும் சேர்த்து கட்டணங்களையும்  வாங்குகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் சிரமத்தை மேற்கொண்டிருக்கும் மாணவர்களிடமிருந்து 40 சதவீத கட்டணத்தை தவிர இதர கட்டணங்களை வாங்க கூடாது என்று இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் செமஸ்டர் கட்டணத்தை வருகின்ற 30ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தி இருப்பதால் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து நீதிமன்றம் குறித்த தீர்ப்பை அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் இந்த வழக்கை ஏற்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் நாளை வழக்கை விசாரிப்பதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

Categories

Tech |