Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் மூலமும் நடத்தலாம்… கேபி அன்பழகன் உத்தரவு…!!

செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் நடத்த உயர்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என அரசு தெரிவித்திருந்தது. அந்த வகையில் அது குறித்த அறிவிப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தற்போது  வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருக்கும் மாணவர்களின் நலனுக்காக இந்த ஆன்லைன் தேர்வு என்பது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் மற்ற மாணவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்படும்.

எந்த தேர்வு வைக்கலாம்? ஆன்லைனா? அல்லது ஆப்லைனா? என்பது குறித்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முடிவு செய்து கொள்ளலாம். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தேர்வுகள் நடத்த முடியாது. இதனால் தேர்வு மையங்கள் போதவில்லை என்கிற பட்சத்தில், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் கூட தேர்வு மையங்கள் அமைத்து தேர்வுகளை வைக்கலாம். அது மட்டுமில்லாமல் விரைவில் பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு கால அட்டவணையை குறித்து அறிக்கை விடப்படும் என்றும் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |