Categories
மாநில செய்திகள்

செப்.,6 நள்ளிரவில் ஆரம்பம்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

செப்டம்பர் 6 ஆம் தேதி நள்ளிரவு முதல் அரசு விரைவு சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வாக பொது போக்குவரத்து என்பது அனுமதிக்கப்பட்டு இரு தினங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் தனியார் பேருந்துகள் அரசுக்கு வைத்த கோரிக்கையின்  அடிப்படையில் வருகின்ற ஏழாம் தேதி முதல் மாவட்டங்களுக்கு உள்ளாகவும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது அதுகுறித்த ஒரு முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

அதாவது, சென்னையிலிருந்து மற்ற வெளியூர்களுக்கு செல்வதற்காக வருகின்ற 6 தேதி நள்ளிரவில் இருந்து அரசு விரைவு மற்றும் சொகுசு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இதற்கான ஏற்பாடுகளை தொடங்கி உள்ளதாகவும் போக்குவரத்து அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும் நாளை முதல் முன்பதிவு செய்வதற்கு ஏற்றவாறு www. tnstc.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்ய வசதிகள் தொடங்க இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |