Categories
மாநில செய்திகள்

“மணல் கடத்தினால் இனி இதான் கதி”… உயர்நீதிமன்றம் அதிரடி…!!

மணல் கடத்தல்காரர்களுக்கு இனி முன்ஜாமீன் என்பது வழங்கப்படமாட்டாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மணல் கடத்தல்காரர்களின் அட்டூழியம் அதிக அளவில் உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் கோர்ட்டில் ஆஜர் செய்யப்படும் பொழுது சுலபமாக முன்ஜாமீன் பெற்று வெளியில் சென்று விடுகிறார்கள். இதனால் அவர்களிடம் எந்த ஒரு பயமும் இருப்பதில்லை. எனவே தற்போது உயர் நீதிமன்றத்தில் இது குறித்து முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் இது குறித்து கூறுகையில், தமிழகம் முழுவதும் மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கிய 40 பேரின் முன்ஜாமீன்கள் தற்பொழுது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய கடத்தல்காரர்களால் தான் நிலத்தடி நீர் பாதிப்பு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டாலும் அவர்களின் முன்ஜாமின்களின் எண்ணிக்கை குறைவதாக இல்லை. ஒரு நாளைக்கு குறைந்தது 15 முன்ஜாமீன் விசாரணைக்கு  வருகின்றது. எப்படியாவது முன்ஜாமின் பெற்றுவிடலாம் என்ற தைரியத்தில் அவர்கள் செயல்படுவதால் இனி கடத்தல் வழக்கில் சிக்கியவர்களுக்கு முன்ஜாமின் வழங்கப்படமாட்டாது என்று உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |