இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஜுன் 15ஆம் தேதி சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு இரு நாடுகளுக்கிடையே மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. அதனால் தேசப் பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 116 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அந்த செயலிகள் அனைத்தும் இந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிராக இருப்பதால் தடை விதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. பப்ஜி உள்ளிட்ட 118 சீன மொபைல் செயலிகளை இந்திய அரசு கடந்த புதன்கிழமை அன்று தடை செய்தது. இதனைத் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமெரிக்க செயலாளர் கீத் க்ராச் மற்ற நாடுகள் அனைத்தையும் தூய்மையான வலை அமைப்பில் சேர்வதற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும் அவர், இந்தியா ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது.
சுதந்திரத்தை விரும்பும் அனைத்து நாடுகள் மற்றும் நிறுவனங்களையும் தூய்மையான வலையமைப்பில் ஒன்று சேருமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என்று கூறியுள்ளார். சீன செயலிகள் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பதாக இந்திய அரசு கூறியுள்ளது. மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை 5ஜி தூய்மையான வலையமைப்பு திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பாம்பியோ, அமெரிக்க அரசாங்கம் தயாரிக்கப்பட்ட தூய்மையான நெட்வொர்க் திட்டத்தை சீன தயாரிக்கப்பட்ட செல்போன் பயன்பாடுகள் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை தேசிய பாதுகாப்பு கவலைகளை சுட்டிக்காட்டியுள்ளது. அதே சமயத்தில் நம்பகத்தன்மையற்ற சீன செயலிகளை ஆப் ஸ்டோர்களில் இருந்து தடை செய்ய அமெரிக்க மொபைல் பெயர்கள் மற்றும் தொலைபேசி தயாரிப்பாளர்கள் விருப்பம் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.