கணவர் மற்றும் குழந்தை முன்னிலையில் கர்ப்பிணிப் பெண் விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தை சேர்ந்த ஜோ-லீ எனும் கர்ப்பிணி பெண் தனது கணவர் மற்றும் குழந்தை முன்னிலையில் காவல்துறையினரால் கைகளில் விலங்கு மாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்கு எதிர்ப்பு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் ஆர்ப்பாட்டத்தை தூண்டிய குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டின் உள்ளே நுழைந்த காவல் அதிகாரிகள் கர்ப்பிணி பெண் என்று கூடக் கருதாமல் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு முன்னிலையில் கையில் விலங்கு மாட்டி கைது செய்தனர்.
அப்போது தான் எந்த தவறும் செய்யவில்லை என காவல் அதிகாரிகளிடம் அந்த பெண் கண்ணீர் விட்டு கதறினார். இந்த காட்சிகள் தற்போது காணொளியாக சமூகவலைதளத்தில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் காவல் அதிகாரிகள் சரியான முறையில் செயல்பட்டதாக அவர்கள் தரப்பு நியாயத்தை தெரிவித்துள்ளனர்.
A young mum who was arrested at her Ballarat home over a 'Freedom Day' protest says she plans to fight her incitement charge. Zoe Buhler's arrest sparked international outrage as it was live-streamed on Facebook, but a top cop has defended the move. | @JaydeCotic pic.twitter.com/ohOwKzRryK
— 10 News First Melbourne (@10NewsFirstMelb) September 3, 2020