Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப் அணி 182 ரன்கள் குவிப்பு…. இலக்கை எட்டுமா ராஜஸ்தான்….!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 182 ரன்கள் குவித்துள்ளது. 

2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 32 வது லீக் போட்டியில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ரஹானே  தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார் இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுலும், கிறிஸ் கெயிலும் களமிறங்கினர்.

கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடி 22 பந்துகள் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த  மயங் அகர்வால் அவர் பங்குக்கு 26 (12) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த டேவிட் மில்லரும், கே.எல் ராகுலும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

அதன் பிறகு கே.எல் ராகுல் 52 (47) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த பூரன் 5, மன்தீப் சிங் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து அதிரடியாக விளையாடி கொண்டிருந்த டேவிட் மில்லர் 40 (27) ரன்களில் கடைசி ஓவரில் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஷ்வின் 1 பவுண்டரி மற்றும் கடைசி 2 பந்தில்  2 சிக்ஸர் அடித்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 182 ரன்கள்  குவித்தது.

கேப்டன் அஷ்வின் 4 பந்துகளில்  17* ரன்களுடனும், முஜீப் 0* ரன்களுடனும்  ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.பஞ்சாபி அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், குல்கர்னி, உனத்கட், சொதி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து  183 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் பட்லரும், த்ருப்பாதியும் களமிறங்கி விளையாடி வருகின்றனர். தற்போது 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்களுடன் விளையாடி வருகிறது.

Categories

Tech |