ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு, கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடுதேடி வரும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். மாணவ மாணவியர்கள் எதிர்பார்த்த அறிவாற்றல் பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடுவது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.