மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று நியாய-அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களின் ராசிக்கு, எதிலும் நிதானமாக இருக்க வேண்டிய நாளாகும்.
பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். உங்களின் ராசிக்கு எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் அனுகூலம் ஏற்படும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன்கோபத்தை குறைப்பது, தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.