Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பாராட்டுகள் குவியும்…! எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்…!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும் என்றாலும், உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும்.

சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்கள் பெற முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபத்தை பெற்றுவிட முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெண்கள் எதிர்பார்த்தவற்றைப் பெற எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். உங்களின் ராசிக்கு நீங்கள் முருக வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.

Categories

Tech |