சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்று பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து உங்களின் தேவைகள் பூர்த்தியாகும்.
நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக இருப்பதும், ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வதும் சிறப்பு. கணவன் மனைவிக்கியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றத்தை பெருக்கிக்கொள்ள முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.