Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் அட்டூழியம்… அப்பாவி மக்கள் 3 பேர் பலி…!!!

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கார்ஹர் மாகாணம் பச்சேரகம் மாவட்டத்தில் சாலையோரம் கண்ணிவெடிகளை பயங்கரவாதிகள் புதைத்து வைத்துள்ளனர். இன்று காலை அப்பகுதியில் வழியாக பொதுமக்கள் நடந்து சென்ற சமயத்தில், திடீரென அந்த கண்ணி வெடிகள் வெடித்து சிதறியதால் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதல் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.

Categories

Tech |