மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள்.
ஆன்மீக, தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்தவந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி, மகிழ்ச்சி ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு தடையின்றி இப்பொழுது கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.