கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலியாக விளங்கும் உங்களின் ராசிக்கு, நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
பணவரவில் இருந்த இடையூறுகள்கூட விலகி அனுகூலங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுப காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.