Categories
உலக செய்திகள்

“உள்ள காற்றே வரல” விமானத்தின் இறக்கையில் சென்று அமர்ந்த பெண்….!!

விமானத்தின் இறக்கையில் நடந்து சென்ற பெண்ணின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது

துருக்கிக்கு சுற்றுலா சென்று உக்ரைன் திரும்பிய விமானம் தரை இறங்கிய நிலையில் பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர். அச்சமயம் ஒரு பெண் மட்டும் விமானத்தின் அவசர வழிக் கதவைத் திறந்து இறக்கை மீது நடந்து கொண்டிருந்ததை பைலட்டுகள் பார்த்து ஏதோ பிரச்சினை என காவல்துறையினரையும் ஆம்புலன்ஸ்ஸும் வரவழைத்தனர். மற்ற பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருக்க குறித்த பெண் மட்டும் அவசர வழிக் கதவைத் திறந்து விமானத்தின் இறக்கை மீது அமர்ந்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் விமான பணிபெண் இறக்கையின் மீது அமர்ந்திருந்த பெண்ணை அழைக்க அந்தப் பெண் ஹாயாக நடந்து விமானத்தின் உள்ளே சென்றார்.

அந்த பெண் மது அருந்தி இருக்கிறாரா என காவல்துறையினர் விசாரித்தால் அவர் மது அருந்தவில்லை. எனவே விமானத்தின் இறக்கை மீது நடந்ததற்கான காரணம் குறித்து அந்த பெண்ணிடம் கேட்ட போது விமானத்தின் உள்ளே மிகவும் வெப்பமாக இருந்ததாகவும் எனவே காற்று வாங்க அவசர வழிக் கதவைத் திறந்து வெளியேறியதாக காரணம் கூறியுள்ளார்.  விமானம் பறக்கும் போது இத்தகைய செயலை செய்யாமல் இருந்தார் என்று நினைத்து சற்று நிம்மதி அடைய முடிகின்றது. அவரது செயலால் தற்போது உக்கிரைன் சர்வதேச விமானத்தில் பயணம் செய்வதற்கு தடை போடப்பட்டுள்ளது. அவர் இறக்கையின் மீது நடக்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |