நாட்டில் சிறு வயது முதல் பெரிய பெண்கள் வரை அனைவருக்கும் எதிராக பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. குறிப்பாக உத்தர பிரதேச மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.. அம்மாநிலத்தின் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி, தனது 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக போட்டோ எடுக்கச் சென்றதை அறிந்த பக்கத்து வீட்டு இளைஞர்கள் 4 பேர் சிறுமியை பின் தொடர்ந்து சென்று, வழிமறித்து கம்பியால் தாக்கி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோ எடுத்து சிறுமியை மிரட்டி இருக்கின்றனர்.. பின்னர் வீட்டுக்கு சென்ற சிறுமி, நடந்ததை அவரின் தந்தையிடம் கூறியுள்ளார்.. இதனையடுத்து தந்தை காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து, கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.. பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காகவும், சிகிச்சை பெறுவதற்காகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..