Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நான் ரிப்போர்ட்டர்… எங்களுடன் வா… பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த இருவர்… தூக்கிய போலீஸ்..!!

சாலையோரம் பழக்கடை நடத்தி வந்த பெண்ணை தவறான உறவுக்கு அழைத்த போலி செய்தியாளர் உள்ளிட்ட 2 பேர் பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியில் வசித்து வருபவர் ஜெயசுஜி.. 30 வயதுடைய இவர் நாக்கால்மடம் பகுதியில் சாலை ஓரத்தில் பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.. இந்த நிலையில், நேற்று இரவு அங்கு வந்த இருவர் குடிபோதையில் பத்திரிகையாளர் எனக் கூறிக் கொண்டு இலவசமாக பழங்களை கேட்டுள்ளனர்.. அதுமட்டுமில்லாமல் தகாத வார்த்தைகளால் பேசி  தவறான உறவுக்கும் அழைத்திருக்கின்றனர்..

இதனால், பெரும் அதிர்ச்சியடைந்த அந்தப்பெண் உடனே கூச்சலிட்டுள்ளார்.. அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரல்வாய்மொழி போலீசார் இருவரையும் பிடித்து விசாரனை நடத்தியதில், அந்த நபர்கள் பொய்கை நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்பானு சுந்தர் என்பதும் அவரிடமிருந்து ‘கடல் சிற்பி’ பத்திரிக்கையின் நிரூபர் அடையாள அட்டையும் கைப்பற்றப்பட்டது.

மற்றொருவர் அவரின் நண்பர் கணேசன் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் இருவர் மீதும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.. மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |