Categories
சென்னை மாநில செய்திகள்

பள்ளி கட்டணம் கேட்காதீங்க…. பள்ளிகளுக்கு ஆப்பு….  பெற்றோர்களுக்கு நல்ல வாய்ப்பு …!!

தனியார் பள்ளிகள் முழுக் கட்டணம் கேட்டால் புகார் கொடுக்கலாம் என E-Mail முகவரி வெளியீடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பொது முடக்கம் அமலில் இருந்துவரும் நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த கல்வி தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியும் கூட பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இணையம் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகள் பள்ளி, கல்லூரி சார்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் 40 சதவீத கல்விக் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

40 சதவீதத்துக்கு மேல் வசூல் செய்யக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்த நிலையில் பல பள்ளிகள் 40 சதவீதத்துக்கும் அதிகமான கட்டணத்தை கட்டாயமாக வசூல் செய்து வந்தது குறித்த பல புகார் எழுந்த நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 40 சதவீதத்துக்கும் அதிகமாக நீதிமன்றத் உத்தரவை மீறி கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெற்றோர்கள் புகார் அளிக்க பிரத்யேக இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் நீதிமன்ற உத்தரவை மீறி 40 சதவீதத்துக்கும் அதிகமாக முழு கட்டணத்தை கட்ட வேண்டும் என்று பெற்றோர்களை பள்ளிகளில் கட்டாயப் படுத்தி இருந்தால் [email protected] என்ற இ-மெயில் மூலமாக புகார் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |