Categories
தேசிய செய்திகள்

2021 ஜூன் 30 வரை…. வேலை இழந்தவர்களுக்கு பாதி சம்பளம்…. மத்திய அரசு புதிய அறிவிப்பு….!!

2021 ஜூன் 30 வரை வேலை இழந்தவர்களுக்கான ஊதிய திட்டம் தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்ததால், பலர் வேலைகளை இழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால்  வேலை இழந்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு 50 சதவிகிதம் சம்பளம் வழங்கப்படும் என்ற சலுகை அறிவிக்கப்பட்டது.

இந்த சிறப்பு ஊதிய திட்டம் ESIC  (employee state insurance corporation) டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பின்படி, 2021 ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய அறிவிப்பில் 30 நாட்களிலேயே சம்பளம் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Categories

Tech |