Categories
உலக செய்திகள்

பால்வினை நோய் பரவல்….? கழிவறையை விட செல்போனில் தான் கிருமிகள் அதிகம்…. ஆய்வில் தகவல்….!!

பொது கழிவறை மூலம் பால்வினை நோய் பரவுமா என்ற கேள்விக்கு ஆய்வு முடிவுகள் மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

இன்றைக்கு பலரிடையே பால்வினை நோய் குறித்த சந்தேகங்கள் ஏராளம் உள்ளன. பொதுவாக பால்வினை நோய்கள் ஒருவர் நம்மை தொடுவதன் மூலமும், அல்லது அவருடன் நெருங்கி பழகுவதன் மூலமும் நம்மை பாதித்து விடும் என்று பலர் அசட்டுத் தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதேபோல ஒரு அசட்டுத்தனமான நம்பிக்கை தற்போது உருவாகி அது கேள்வியாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பொது கழிப்பறை மூலம் பால்வினை நோய்கள் பரவுமா ? என்பதுதான் கேள்வி.

இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில், பலரும் பயன்படுத்துவதால் பொது கழிப்பறை மூலம் பால்வினை நோய்கள் அதிகமாக பரவும் என்பது உண்மையில்லை. நோய் உண்டாக்கும் பாக்டீரியா அல்லது வைரஸ் கழிப்பறை இருக்கையில் நீண்ட நேரம் உயிருடன் இருக்காது. எனவே கழிவறை மூலம் பால்வினை நோய் பரவாது.  உடல் ரீதியான தொடர்பு  மூலம் மட்டுமே இந்நோய்கள் எளிதாக பரவும். கழிப்பறையை நோய்களின் கூடாரமாக மக்கள் கருதினால், கழிப்பறையை விட அதிக கிருமிகள் நாம் உபயோகிக்கும் செல்போனில் தான் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். 

Categories

Tech |