Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் ராஜஸ்தான் தோல்வி…. பஞ்சாப் அசத்தல் வெற்றி…!!

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது 

2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 32 வது லீக் போட்டியில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ரஹானே  தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுலும், கிறிஸ் கெயிலும் களமிறங்கினர். கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடி 30 (22) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த  மயங் அகர்வால்  26 (12) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து  டேவிட் மில்லரும், கே.எல் ராகுலும் ஜோடி சேர்ந்தனர். கே.எல் ராகுல் 52 (47) ரன்களும், டேவிட் மில்லர் 40 (27) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக  அஷ்வின் 4 பந்துகள் 17*  ரன்கள் (1 பவுண்டரி, 2 சிக்ஸர்) அடிக்க இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 182 ரன்கள்  குவித்தது. பஞ்சாப்  அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், குல்கர்னி, உனத்கட், சொதி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து  183 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் பட்லரும், த்ருப்பாதியும் களமிறங்கினர். பட்லர் 23  (17) ரன்களும், அடுத்து வந்த சஞ்சு சாம்சன் அவர் பங்குக்கு 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு ரஹானேவும், த்ருப்பாதியும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் தட்டி தடுமாறி ரன்கள் சேர்த்தனர். இக்கட்டான நிலையில் பொறுமையாக விளையாடிய  த்ருப்பாதி 50(45) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஆஸ்டென் டர்னர் 0, ரஹானே 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் போராடிய ஸ்டுவட் பிண்ணி 33* (11) ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 12 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அஷ்தீப் சிங், கேப்டன் அஷ்வின், முகமது சமி ஆகியோர் 2 விக்கெட்டுகளும், முருகன் அஷ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

 

 

 

Categories

Tech |