Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “கூடுதல் ரயில்கள்”… எந்தெந்த வழித்தடங்கள் தெரியுமா…? ரயில்வே துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளாக பொது போக்குவரத்து என்பது தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் தனியார் பேருந்துகள் மாவட்டங்களுக்கு உள்ளான பேருந்துகள் அனைத்தும் செப்டம்பர் ஏழாம் தேதி இயக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. மக்கள் பேருந்துகளை விட ரயில்களை அதிகம் பயன்படுத்துவதால் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என தமிழக அரசு ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்திருந்தது. அதன்படி தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தற்போது கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

அதாவது, தமிழகத்தில் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை  9 ஆக அதிகரித்துள்ளது. இவை எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படும் என்றால், சென்னை – கோவை இடையே 3 சேவைகளும், சென்னை – திருச்சி மற்றும் கோவை – மயிலாடுதுறை தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதேபோல் சென்னை – மதுரை இடையே 2 சேவைகளும், சென்னை – காரைக்குடி மற்றும் சென்னை – தூத்துக்குடி இடையேயும் தினசரி சிறப்பு ரயில்களும் இயக்கப்பட இருப்பதாக, தெற்கு ரயில்வேயின் இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |