திமுகவில் போட்டியின்றி பதவியேற்ற இரு தலைவர்களுக்கு ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
திமுக கட்சியின் பொருளாளராகவும் பொதுச் செயலாளராகவும் டி ஆர் பாலு மற்றும் துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த போது இவர்களுக்கு எதிராக எந்த ஒரு வேட்புமனுத்தாக்கல் இல்லாத காரணத்தால் போட்டிகள் ஏதும் இல்லாமல் இந்த பதவியை பெற்றனர். இதனை பல்வேறு தலைவர்கள் தற்போது பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந் தன்னுடைய வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவிக்கும் விதத்தில் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதாவது அவருடைய டுவிட்டர் பதிவில், ” மதிப்பிற்குரிய நண்பர்கள் துரைமுருகன் மற்றும் T.R. பாலு இருவருக்கும் மன மார்ந்த வாழ்த்துக்கள்” இவ்வாறு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும் செப்., 9 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் கூட இருக்கும் திமுக பொதுக்குழுவில், புதிய பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.