Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் 5 குழந்தைகள் கொலை… தாய் தற்கொலை முயற்சி…நடந்தது என்ன தெரியுமா?…!!!

ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் 5 குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் சோலிங்கின் நகரில் இருக்கின்ற ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் 6 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணின் தாய் அப்பகுதி காவல்துறையினரை தொடர்பு கொண்டு தனது மகளின் வீட்டில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று சந்தேகம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், அந்தப் பெண் வசித்து வந்த பிளாட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஐந்து குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததை கடந்து காவல்துறையினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். ஒரு குழந்தை மட்டும் உயிருடன் இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குழந்தைகளின் தாயை காவல்துறையினர் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் அந்தப் பெண் அங்குள்ள ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அதிக காயங்களுடன் அவரை மீட்டு மருத்துவமனையில் காவல்துறையினர் சேர்த்தனர். அந்தப் பெண் தனது ஐந்து குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் சிகிச்சைக்குப் பின்னர் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தலாம் என காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

குழந்தைகள் எவ்வாறு உயிரிழந்தனர் என்று காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்தில் மூன்று பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குழந்தைகளின் வயது ஒன்று, இரண்டு மற்றும் மூன்று வயதுடைய பெண் குழந்தைகளும், 8 மற்றும் ஆறு வயதுடைய இரண்டு ஆண் குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |