Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வணக்கம் மேடம் சொல்லுங்க… சார் உங்கள ஸ்டாலின் பாராட்டுறாரு… பதிலடி கொடுத்த நபர்..!!

ஸ்டாலின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசியில் பேசிய பெண்ணுக்கு எதிர் நபர் பதிலடி கொடுத்துள்ளார்.

திமுக தலைவர் திரு. மு. க. ஸ்டாலின் அலுவகத்தில் இருந்து பேசுவதாக கூறி பெண்மணி ஒருவர் உரையாடி வருகிறார். அது போன்ற ஒரு தொலைபேசி அழைப்பு ராமேஸ்வரத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அழைப்பில் பேசிய பெண் ராமேஸ்வரம் ராமமூர்த்தியை பாராட்டியதாக கூற, அவரோ நல்லவர்களிடம் உயர்ந்துவரும் பாராட்டுதான் தனக்கு பெருமை சேர்க்கும் என்றும் ஸ்டாலினிடம் இருந்து பாராட்டு தேவையில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார். இருவருக்கும் நடந்த உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உரையாடல்..!

எதிர் நபர்: வணக்கம் மேடம் சொல்லுங்க.

பெண்      : என் பெயர் மலர்விழி, நான் திமுக ஸ்டாலின் ஐயா அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன்.

எதிர் நபர்: அப்படியா ரொம்ப சந்தோஷம் மேடம், சொல்லுங்க மேடம்.

பெண்    : எப்படி இருக்கீங்க சார்.. ஏரியா மக்கள் எப்படி இருக்காங்க சார்..

எதிர் நபர்: நான் நல்லா இருக்கிறேன்.. ஏரியா மக்களும் நல்லா இருக்கிறார்கள்.

பெண்     : உங்க ஊரில் ஆட்டோ பஸ்கள் எல்லாம் ஓடுதா சார்.

எதிர் நபர்: எல்லாம் ஓடுது, நல்லா ஓடுது..

பெண்    : சார் உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும் சார்.

எதிர் நபர்: சொல்லுங்க மேடம்.

பெண்     : ஊர் மக்களுக்கு உங்கள் மூலமா நல்லது செய்றது தலைவருக்கு தெரிய வந்தது சார். தலைவர் என்ன நினைக்கிறார் என்றால்  உங்கள மாதிரியான நல்ல எண்ணத்தினால் தான் தமிழ்நாடு நல்ல எடுத்துக்காட்டாய் இருக்குது என்று நினைக்கிறார் சார். தலைவர் பாராட்டுறாரு  சார். உங்க கூட நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என்று விரும்புறார் சார்.

எதிர் நபர்: நான் இங்க நல்லது செய்றேன்னு தலைவர் எப்படி கண்டுபிடித்தார்?

பெண்.    : சார் நீங்க உதவி செய்றது வச்சு தான் சார் உங்க ஊர் மக்கள் மூலமா

எதிர் நபர்: ஊரு மக்களெல்லாம் சேர்ந்து உங்க தலைவர்கிட்ட போய் சொல்லிட்டாங்களா?

பெண்.    : இல்ல சார்.. உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரோ உங்க பெயரையும்  உங்க இந்த நம்பரையும் நல்லோர் கூடம் என்னும் வெப்சைட்ல போட்டுவிட்டு இருக்காங்க சார். அதுல எடுத்துதான் பாராட்டுகிறோம் சார் உங்கள.

எதிர் நபர்: ஓ பரவாயில்ல பரவாயில்ல மேடம். ஆனா அவர் பாராட்டுவதுதா எனக்கு மைனசே … ஏன்னா நல்லவங்க கிட்ட இருந்து பாராட்டு வந்தால்தானே எங்களுக்கு ஒரு இது. அவர்கிட்ட இருந்து பாராட்டு வந்தால் அது நல்லது இல்லையே. .அதிலேயும் அவர்கூட சேர்ந்து தான் நல்லது எதுவும் பண்ண முடியாதே. அவங்க குடும்பத்திற்கு தான் நல்லது பண்ண முடியும். சார் யாரு உங்க தலைவர் ஸ்டாலின் குடும்பத்திற்கு தான் அடுத்து யாரு இன்பநிதி அவர் குடும்பத்துக்கும் தான் நல்லது பண்ண முடியும்.

பெண்.   : ஓகே சார்.

எதிர் நபர்: நீங்க போன் பண்ணா இனிமேல் வந்து ஸ்டாலின் உங்கள நல்லா பாராட்டுராரு விரும்புராரு  அவங்க எங்க குடும்பத்துக்கு வேலை செய்ய கூப்பிடுறாரு என்று  சொல்லி  நேரா வேலைக்கு கூப்பிடுங்க வந்திடுவோ நாங்க

பெண்.    : ரொம்ப நன்றி சார். உங்க கிட்ட பேசினது மகிழ்ச்சி சார். ஸ்டாலின் சார் தொடர்பா நன்றியை தெரிவிக்கிறோம்.

எதிர் நபர்: நன்றி நன்றி…!

 

Categories

Tech |