தனி நபர்களாக செல்லும்பொழுது முக கவசம் என்பது கட்டாயம் அணிய வேண்டும் என்று எந்த ஒரு வழிகாட்டுதல்களையும் வெளியிடவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
நான்காம் கட்ட ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்து இருந்தாலும் அதனை மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கையாள வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. அந்த வகையில் முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி, அடிக்கடி கைகளை நன்றாக கழுவுதல், இவை மூன்றும் முக்கிய காரணிகளாக எடுத்துக் கூறப்படுகின்றன. ஆனால் இதில் தற்பொழுது ஒரு சந்தேகம் எழுந்து உள்ளது அதாவது காரில் தனியாக பயணம் செய்யும் பொழுது முக கவசம் என்பது கட்டாயம் அணிய வேண்டுமா? என்று கேட்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், ” சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி ஆகியவற்றின் போது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கும் பட்சத்தில், மற்றவர்களுக்குத் தொற்று பரவாமல் இருக்க முகக்கவசம் அணிவது கட்டாயம். அதே நேரத்தில் கார் ஓட்டும் போது முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுவதாக எழுந்து வந்த கருத்து தவறானது. மேலும் இது பற்றிய எந்த ஒரு வழிகாட்டலையும் தற்போது வரை வெளியிடவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.