Categories
மாநில செய்திகள்

“இனி சனிக்கிழமைகளிலும் உண்டு”… தமிழக அரசு உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமை வரை செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மார்ச் மாதத்தில் போடப்பட்ட ஊரடங்கிலிருந்து தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரை மக்களின் அத்தியாவசிய தேவைகள் என்பது குறைந்த வண்ணமே இருந்தது. ஆனால் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் பல வகையான தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் முக்கியமானவை, பொது போக்குவரத்து அரசு அலுவலகங்கள் நூறு சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் போன்றவை ஆகும்.

இந்த தளர்வுகள் மக்களின் பொருளாதாரம் மேம்படும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கட்டாயம் தடுப்பு நடவடிக்கைகளையும் மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அரசு கோரிக்கை வைத்துள்ளது. மேலும் தற்பொழுது அரசு இந்த நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வில் சில முக்கிய அறிவிப்பை கூறியுள்ளது. அதாவது அரசு அலுவலகங்கள் வாரந்தோறும் சனிக்கிழமை வரை செயல்படும் எனவும் இந்த நடைமுறை டிசம்பர் மாதம் வரை செயல்படுத்தப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |