Categories
உலக செய்திகள்

முகக்கவசம் போடலனா சவப்பெட்டி தண்டனை… இந்தோனேசிய அரசு…!!!

இந்தோனேசியாவில் முக கவசம் அணியாமல் வெளியே நடமாடிய நபருக்கு சவப்பெட்டியில் வைத்து கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்தோனேசிய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. மேலும் மக்கள் அனைவருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அவ்வகையில் மக்கள் எவரும் வீடுகளை விட்டு வெளியேறும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமன்றி மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறும் மக்களுக்கு அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கட்டுப்பாட்டை மீறி முக கவசம் அணியாமல் தலைநகர் ஜகார்தாவில் வெளியே நடமாடிய நபருக்கு மாதிரி சவப்பெட்டியில் வைத்து கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |