Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று… 7 மாவட்டங்களில் கனமழை…!!

இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்பொழுது ஒரு சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து கொண்டிருக்கும் சூழலில் அணைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. மேலும் இன்றும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், மதுரை,திருச்சி போன்ற  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை நகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் வரி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |