Categories
மாநில செய்திகள்

இன்று முதல்… தொடங்கியாச்சு “ஆன்லைன் புக்கிங்”…!!

தொலைதூர பயணத்திற்காக முன்பதிவு செய்து கொள்ள ஆன்லைன் புக்கிங் என்பது தற்போது தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் பொது போக்குவரத்து என்பது அமலில் இருந்துவரும் நிலையில் சென்ற 1ஆம் தேதி முதல் அனைத்து அரசுப் போக்குவரத்துகளும் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. மேலும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வருகின்ற 7 தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அரசு விரைவு பேருந்து சென்னையிலிருந்து மற்ற வெளியூர்களுக்கு செல்வதற்காக செப்டம்பர் 6 ஆம் தேதி நள்ளிரவு தொடங்க உள்ளது.

இதனால் தமிழகத்தில் தொலைதூர அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு ஏதுவாக முன்பதிவு செய்து கொள்ள ஆன்லைன் புக்கிங் துவங்கி உள்ளது. வரும் 7ந் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துவங்க இருக்கும் நிலையில் ஆன்லைன் புக்கிங் தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது. நேரடியாக சென்று புக்கிங் செய்ய முடியாதவர்கள்,அரசுப் பேருந்துகளில் தொலைதூரப் பயணத்திற்காக www.tnstc.in எனும் இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |