குல்பூஷன் ஜாதவுக்காக வாதாடுவதற்கு வக்கீலை நியமனம் செய்ய இந்தியாவிற்கு மேலும் ஒரு வாய்ப்பை பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ளது.
பாகிஸ்தானில் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி அந்நாட்டு அரசு கைது செய்தது. அதனால் அவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த வழக்கை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது தொடர்ந்து, இஸ்லாமாபாத் கோர்ட்டில் மறு ஆய்வு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் குல்பூஷன் ஜாதவ்வுக்கு ஆதரவாக வக்கீலை நியமனம் செய்யுமாறு இந்தியாவிற்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது.
இருந்தாலும் அவருக்காக இந்திய வக்கீலை நியமனம் செய்ய இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துவிட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், ஆஜரான அட்டார்னி ஜெனரல், ” குல்பூஷன் ஜாதவ்காக வாதாடுவதற்கு வக்கீலை நியமனம் செய்யுமாறு இந்தியாவை கேட்டுக்கொண்டோம். ஆனால் இந்தியா அதற்கு எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை” என்று அவர் கூறினார். இதனைத்தொடர்ந்து ஜாதவுக்காக வக்கீலை நியமனம் செய்ய இந்தியாவிற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி, அடுத்த மாதம் மூன்றாம் தேதிக்கு இந்த வழக்கை பாகிஸ்தான் அரசு ஒத்திவைத்துள்ளது.