இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதால், கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருக்கின்றது. சில நாட்களாக நாள்தோறும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தினம் தோறும் கொரோனா தொற்று 80 ஆயிரத்தை எட்டியுள்ளது. அதே சமயத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து இருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கொரோனாவால் தற்போது வரை பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 39 இலட்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 83,341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டால், தற்போது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,36,478 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 1096 பேர் உயிர் இழந்ததால், மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68,472 ஆக அதிகரித்துள்ளது.
அதே சமயத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று மட்டும் 66,659 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் தற்போது வரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,37,151 ஆக இருக்கின்றது. நாடு முழுவதும் இருக்கின்ற பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிக்கப்பட்ட 8,31,124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தியாவில் கொரோனா பரிசோதனை நேற்று மட்டும் 11,69,765 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை இந்தியாவில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 4,66,79,145 ஆக இருக்கின்றது என ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது.