Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்… பாதுகாப்பு பணி தீவிரம்…!!!

வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் ராணுவ அலுவலர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வடக்கு காஷ்மீரில் இருக்கின்ற பாரமுல்லா மாவட்டத்தின் பட்டன் பகுதியை அடுத்துள்ள எடிபோராவில் பிரிவினைவாதிகள் பதுங்கி உள்ளதாக ராணுவ உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பின்னர் அப்பகுதியை முழுவதுமாக சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனை சிறிதும் எதிர்பார்க்காத பிரிவினைவாதிகள் உடனடியாக பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதன் பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் ராணுவ அலுவலர் ஒருவர் படுகாயமடைந்தும், 92 வீரர்கள் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது அப்பகுதி முழுவதும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பெரிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் அனைத்தையும் ராணுவத்தினர் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |