பாஜகவுக்கு முஸ்லிம்கள் யாரும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று பஞ்சாப் அமைச்சர் சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரின் மாநிலத்தின் கடிகார் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தாரிக் அன்வருக்கு ஆதரவாக, பஞ்சாப் மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசும் போது , முஸ்லிம் மக்கள் யாரும் சிறுபான்மையினராகக் கருத வேண்டாம் என்றார் என்று கூறினார்.
மேலும் , இந்தத் தொகுதியைப் பொருத்தவரை நீங்கள் தான் பெரும்பான்மை மக்கள் . நீங்கள் சுமார் 64 சதவீதம் பேர் இந்த தொகுதியில் உள்ளீர்கள். எனவே, பாஜகவுக்கு எதிராக வாக்களித்து நரேந்திர மோடியை நீங்கள் தோற்கடிக்க வேண்டும். இவரின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். வாக்களர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அமைச்சர் சித்துவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.