Categories
மாநில செய்திகள்

கூடுதலாக 4 சிறப்பு ரயில்கள்… நாளை தொடங்குகிறது முன்பதிவு…!!

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொது போக்குவரத்து என்பது சென்ற 1ஆம் தேதி அமலுக்கு வந்தது. அந்தவகையில் வருகின்ற 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து என்பது அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அந்த வகையில் சிறப்பு ரயில்கள் மாவட்டங்களுக்கு இடையேயும் மாநிலங்களுக்கு இடையேயும் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்திருந்தது. அந்தவகையில் தற்போது கூடுதலாக 4 ரயில்கள் முக்கிய வழித்தடங்களில் இயக்க இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

செங்கோட்டை – சென்னை எழும்பூர் இடையே வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல் சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி, சென்னை சென்ட்ரல் – மேட்டுப்பாளையம், திருச்சி – நாகர்கோவில் ஆகிய நகரங்களுக்கு இடையே நாள்தோறும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்க உள்ளது. முன்பதிவு உறுதிசெய்யப்பட்ட பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். வெப்பநிலை அறியும் சோதனை செய்ய வேண்டியுள்ளதால் பயணிகள் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு ரயில் நிலையத்திற்கு வந்துவிட வேண்டும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |