கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து அக்டோபர் இறுதிக்குள் தயாராக வாய்ப்பில்லை என அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஃபாஸி கூறியுள்ளார்.
நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து குறித்து கூறுகையில், “நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் தொற்றுக்கான தடுப்பு மருந்து தயார் நிலையில் இருக்கும் என மக்கள் நினைக்கிறார்கள்.
ஆய்வாளர்கள் மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வது தடுப்பு மருந்தை தயார் செய்பவர்களுக்கு ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு தூண்டுதலாக அமையும். ஆனால் அதற்காக அக்டோபர் மாதத்தின் இறுதியில் தடுப்புமருந்து பெற்றுவிடலாம் என்பது கற்பனையில் மட்டுமே நடக்கக் கூடியது. உண்மையில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவித்துள்ளார்.