Categories
சென்னை மாநில செய்திகள்

பேருந்து கிடைக்காததால்….. பொதுமக்கள் அவதி…!!

கோடை விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக பலரும் தனது கிராமங்களுக்கு செல்வதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோடை விடுமுறை, தேர்தல், புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை என்பதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த கிராமங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதற்க்கென அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நேற்று 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கபட்டுள்ளன.

Image result for சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்

இந்நிலையில் நேற்று ஆயிரக்கணக்கான பயணிகள் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு நேரத்திலும் தொடர்ந்த போக்குவரத்து நெரிசலாலும், பல மணி நேரம் பேருந்து கிடைக்காமலும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர். தொடர் விடுமுறையைகாரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளை இன்றும் இயக்குவதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |