Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் வகுப்பில்… “ஆபாச வீடியோக்கள்”…. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள்..!!

குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் இருக்கும் போது மர்ம நபர்கள் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என தற்போது ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஜூம் செயலி மூலம் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த சமயம் மர்ம நபர்கள் ஸ்ட்ரீமிங்கில் புகுந்து ஆபாச வீடியோக்களை ஒளி பரப்பி உள்ளனர்.

இதனால் ஆசிரியர் பதற்றமடைந்து வகுப்பை உடனடியாக நிறுத்தியுள்ளார். இதேபோன்று பரப்பனங்காடி பள்ளியில் வகுப்புகளுக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவில் ஊடுருவிய மர்ம நபர்கள் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை வெளியிட தொடங்கியுள்ளனர். இதனைப் பார்த்த ஆசிரியர்கள் அந்த குழுவை உடனடியாக டெலிட் செய்தனர். ஆனால் வாட்ஸ்அப் குழுவில் வரும் அனைத்து செய்திகளையும் மாணவர் ஒருவர் ஸ்கிரீன் ரெக்கார்டு செய்ததால் வகுப்பில் பங்கு பெற்றவர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் தவறாக பதிவிடப்பட்ட ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகின்றது.

இச்சம்பவங்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல்துறை அதிகாரி கூறுகையில், “வாட்ஸ்அப், ஸ்கைப், கூகுள் மீட், ஜூம்  போன்ற பல்வேறு செயல்களின் மூலம் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து செயலிகளையும் அரசு கவனிப்பது என்பது சாத்தியமற்ற செயல். எனவே மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்” என அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |