நடிகர் சூர்யாவை பாராட்டி அவரது ரசிகர்கள் மதுரையில் அடித்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் என்பது அவர் ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதர் என்பதை புரிந்து கொண்ட பட்டாளம் ஆகும். நடிகர் சூர்யா மாணவர்களின் கல்விக்கு உதவுவது, நாட்டிற்கு பாதிப்பை விளைவிக்கக்கூடிய செயல்களுக்கு எதிராக குரல் எழுப்புவது உள்ளிட்ட நற்செயல்களில் சூர்யா அடிக்கடி தலையிடுவதால் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில், திரையுலகில் 23 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நடிகர் சூர்யாவிற்கு, அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் எம்ஜிஆர், விவேகானந்தரை சித்தரித்து போல சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டிய தொடர்ந்து, மதுரையில் சூர்யா ரசிகர்கள், சூர்யாவை சேகுவாரா போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும், அதில் “திரையுலகை ஆண்டது போதும், தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே என குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.