திரையரங்கு திறப்பது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக பரபரப்பு போஸ்டர் ஒன்றை மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் பல தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பல விஷயங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. இந்நிலையில் ‘தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு என்ற தலைப்பில்’ விஜய் ரசிகர்கள் மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், “கொரோனா மறந்தாச்சு, இயல்புநிலை வந்தாச்சு, திரையரங்கம் என்னாச்சு?” என்று முதல்வரிடம் கேள்வி எழுப்புவது போல் வாசகம் இடம் பெற்றுள்ளது. மேலும் மாஸ்டர் வகுப்பிற்காக காத்திருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.