Categories
தேசிய செய்திகள்

“FAU-G” இந்தியர்களை முட்டாளாக்கிய பிரபல நடிகர்…… வைரலாகும் ட்விட்டர் பதிவுகள்….!!

பிரபல நடிகர் அக்ஷய்குமார் இந்திய மக்களை முட்டாளாக்கி விட்டதாக பல கருத்துக்கள் ட்விட்டரில் தாறுமாறாக பரவி வருகின்றன. 

இரண்டு நாட்களுக்கு முன் பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இதில், PUBG செயலிக்கு இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடிமையாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பப்ஜி செயலி தடைசெய்யப்பட்டது இளைஞர்களுக்கு மன உளைச்சலை தந்ததால், PUBG க்கு  மாற்றாக பல கேம்கள் இருப்பதாக சமூகவலைதளங்களில் பல கருத்துக்கள் தொடர்ந்து பரவி வந்தன. இந்நிலையில் PUBG-க்கு மாற்றாக சுயசார்பு இந்தியாவின் விளையாட்டு,

இதில் நம் ராணுவ வீரர்கள் படும் துயரத்தை நாம் புரிந்து கொள்ள முடியும் எனக்கூறி FAU -G  என்ற விளையாட்டை நடிகர் அக்ஷய்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். தற்போது பல ட்விட்டர் பக்கங்கள் அவர் வெளியிட்ட போஸ்டரை பதிவிட்டு இணையத்திலிருந்து புகைப்படத்தை திருடி, அசல் இல்லாத பெயர் வைத்து தேசப்பற்றின் பெயரில் மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் என பகிர்ந்துள்ளது. மேலும் அக்ஷய் குமார்  பகிர்ந்த புகைப்படம் பிரபல Call of duty game  இன் புகைப்படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

Categories

Tech |