ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு மத்தியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சீன பாதுகாப்பு துறை அமைச்சர் நேரில் சந்தித்து பேசினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்து கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். பாதுகாப்புத்துறை மந்திரி களுக்கு மத்தியில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்திக்க வேண்டும் என்று சீன பாதுகாப்பு துறை மந்திரி கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்தியா, லடாக் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் மோதலுக்கு மத்தியில், இந்தியா மற்றும் சீனா பாதுகாப்புத்துறை மந்திரிகள் சந்திப்பு சர்வதேச அளவில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு இடைப்பட்ட நேரத்தில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்பு துறை அமைச்சர் விய் பென்ஹி ஆகியோர் சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்பின் போது இரு நாட்டின் அதிகாரிகளும் உடன் இருந்தார்கள். அது மட்டுமன்றி பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்த ஆலோசனை அந்த சந்திப்பில் பேசப்பட்டது.