ஜெருசலேம் நகரில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் இருவரும் உரிமை கொண்டாடி கொண்டிருக்கும் ஜெருசலேம் நகர் நீண்ட காலமாக சர்ச்சையில் இருந்து கொண்டிருக்கிறது. இந்நகரில் கிறிஸ்து பிறப்புக்கு முன்னர் அரசர்கள் பலர் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பல அன்னிய படையெடுப்புகளை நேருக்கு நேர் எதிர் கொண்டவர்கள். இந்த நிலையில் கி.மு.701 ஆம் நூற்றாண்டில் ஆசிரியர்களின் படையெடுப்பு முற்றிலும் முறியடிக்கப்பட்டது. அதன் பின்னர் கி.மு. 586ஆம் நூற்றாண்டு பாபிலோன் நகரம் முழுவதுமாக அளிக்கப்பட்டது. அண்ணவரம் வரலாற்று சிறப்புமிக்க தொங்கும் தோட்டம் கொண்டு காட்சியளித்தது.
இந்நிலையில் ஜெருசலேம் நகரில் அரண்மனை ஒன்றை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த அரண்மனை கி.மு.701 மற்றும் 586 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். அந்தக் காலகட்டத்தில் 8 அரசர்கள் அடுத்தடுத்து தொடர்ந்து அரசாட்சியை செய்து வந்துள்ளனர். அவர்களில் ஐந்துபேர் கிறிஸ்துவின் முன்னோர்கள் என பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பழங்கால அரசர்களுக்கும், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டறியப்பட்ட அரண்மனையில் இருந்து கிடைத்த கலைப் பொருள்களுக்கு இடையே மிக நெருங்கிய ஒற்றுமை இருக்கிறது.
அரண்மனையின் கல் வேலைப்பாடுகள் அனைத்தும் நவீன இஸ்ரேலின் நாணயத்தில் இடம்பெறுகின்றன. கடந்த கி.மு. 586ஆம் நூற்றாண்டில் அரண்மனை அழிக்கப் பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அதிலுள்ள சில கலைப் பொருட்கள் மட்டும் ஆய்வில் கிடைத்துள்ளன. அந்த அரண்மனையில் இருந்து கிடைத்த அனைத்து கலைப்பொருட்களும் அடுத்து வரும் நாட்களில் ஜெருசலேம் நகரில் காட்சிக்கு வைக்கப்படும் என தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.