தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் சமூக பரவலை எட்டவில்லை என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆராய்ச்சிகள் மேற்கொண்டு மக்களுக்கு தேவையானதை சிறப்பாக செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று, கடலூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மேலும் மாவட்டத்திற்கு ஒரு சித்தா மருத்துவ மையம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதற்கு முன்னதாக, செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்ட இரு ஆம்புலன்ஸ்கள் உள்பட கொரோனா நோயாளிகளை ஏற்றி வருவதற்கான 108 ஆம்புலன்ஸ் சேவையையும் அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் என்பது சமூக பரவலை இன்னும் எட்டவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.