இந்திய பெருங்கடலில் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் பரவியது. இலங்கை கடற்படையின் 4 கப்பல்கள் மற்றும் இலங்கையின் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய போர்க் கப்பல்கள் அனைத்தும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
கப்பலில் இருந்த 19 ஊழியர்கள் உயிர்காக்கும் படகுகள் மூலமாக பாதுகாப்பாக வெளியேறினர். அவர்கள் அனைவரையும் இலங்கை கடற்படை கப்பல்கள் மீட்டன. கப்பலில் இருந்த கேப்டன் உள்ளிட்ட மூன்று பேர் பத்திரமாக இருப்பதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது. மற்றொரு ஊழியர் மாயமான நிலையில், அவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு இலங்கை அரசு இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. அதனால் இந்திய கடலோர கடற்படைக்கு உரிமையான சவுரியா, சரங் மற்றும் சமுத்திர ஆகிய மூன்று கப்பல்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
அதுமட்டுமன்றி டோர்னியர் விமானம் ஒன்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக இலங்கைக்கு விரைந்து சென்றது. இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணி இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. கப்பலின் ஊழியர்கள் இருந்த பகுதியில் பற்றிய கப்பலின் ஊழியர்கள் இருந்த பகுதியில் பற்றிய தீயை இந்திய கடலோர காவல்படையின் தீயணைப்பு குழுவினர் அனைவரும் விரைவில் அணைத்தனர். மற்ற பகுதிகளில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே தீப்பிடித்த பகுதியில் மீண்டும் தீ பிடிக்காமல் இருக்க குளிரூட்டும் பணிகளை மீட்புக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
மூன்றாவது நாளாக இன்றும் தீயணைப்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இன்று காலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு எதுவும் ஏற்படவில்லை எனவும் இந்திய கடலோர காவல்படை கூறியுள்ளது. கடற் பகுதியில் எண்ணெய் படலம் எதுவும் இல்லாததால் தற்போது வரை எண்ணெய் கசிவு எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயத்தில் கப்பலில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதனால் கப்பல் இலங்கை கடற்கரையில் இருந்து 30 மைல் தொலைவில் இழுத்து செல்லப்பட்டது. இந்த தீவிர பணியை இந்திய கடலோர காவல்படை மற்றும் இலங்கை கப்பல்கள் இணைந்து வெற்றிகரமாக செய்து முடித்தன. கப்பலில் இருந்த 23 மாலுமிகள் 22 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ள நிலையில் ஒருவரை மட்டும் காணவில்லை. அந்த நபர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.